வெற்றி இலக்கை அடைந்து வரலாற்று சாதனையைப் படைத்தது ஜிம்பாப்வே; இலங்கைக்கு தோல்வி…

First Published Jul 1, 2017, 11:21 AM IST
Highlights
Zimbabwe created the historic record of winning goal Defeat to Sri Lanka


இலங்கையை வீழ்த்தியதன் மூலம் ஒரு நாள் ஆட்டத்தில் மிகப்பெரிய இலக்கை துரத்தி வெற்றிக் கண்ட அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது ஜிம்பாப்வே.

இலங்கை – ஜிம்பாப்வே மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் காலே நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியில் குஷல் மென்டிஸ் 86 ஓட்டங்கள், உபுல் தரங்கா 79 ஓட்டங்கள், குணதிலகா 60 ஓட்டங்கள் குவித்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் சதாரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக சாலமோன் மிரே 96 பந்துகளில் 112 ஓட்டங்கள் குவித்தார் மாஸ் காட்டினார். சீன் வில்லியம்ஸ் 65 ஓட்டங்களும், சிக்கந்தர் ராஸா ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் குணரத்னே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சாலமோன் மிரே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் மிகப்பெரிய இலக்கை துரத்தி வெற்றிக் கண்ட அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது ஜிம்பாப்வே.

tags
click me!