சேவாக் மட்டும் இருந்திருந்தால் இதெல்லாம் ஒரு ஸ்கோரா..?

By karthikeyan VFirst Published Aug 5, 2018, 1:38 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குறைந்த இலக்கை விரட்ட் முடியாமல் இந்திய அணி தோற்றது. இதேநிலையில், சேவாக் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சேவாக் இருந்திருந்தால், குறைந்த இலக்கை விரட்டும் இரண்டாவது இன்னிங்ஸ் வேறு மாதிரியாக முடிந்திருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் தோல்விக்கு காரணம். 

விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்கால், 194 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இந்த போட்டி குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த வெங்கடேஷ் பிரசாத், 200 ரன்களுக்கு குறைவான இலக்கை கொண்ட போட்டிகளில் ஒரு முனையை விடுத்து மறுமுனையில் அடித்து ஆட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். 

தற்போதைய இந்திய அணியிலும் சரி, இந்த போட்டியிலும் சரி, விராட் கோலியின் மீது அனைத்து சுமைகளும் உள்ளன. மற்ற பேட்ஸ்மேன்களும் பங்களிப்பு செய்ய வேண்டும். ஸ்விங் பந்துவீச்சிற்கு ஏற்ற வகையில் வீரர்கள் கால் நகர்த்தல்களை மேம்படுத்த வேண்டும். 

இதுமாதிரியான குறைந்த இலக்கை கொண்ட போட்டிகளில் சேவாக்காக இருந்தால், அடித்து ஆடி மற்ற பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கிவிடுவார். சேவாக் இருந்திருந்தால் இதெல்லாம் ஒரு ஸ்கோரே கிடையாது என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். 
 

click me!