டென்னிஸ் குயின் செரீனா வில்லியம்ஸ் ஓய்வு..! சாதனை வீராங்கனையின் டென்னிஸ் அத்தியாயம் முடிந்தது

By karthikeyan VFirst Published Sep 4, 2022, 5:27 PM IST
Highlights

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
 

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான 41 வயதான செரீனா வில்லியம்ஸ் நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அதன்படி நியூயார்க்கில் நடந்துவரும் அமெரிக்க ஓபன் தொடரில் கலந்துகொண்டு விளையாடிய அவர், 3வது சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லாவிடம் 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோற்றதையடுத்து, செரீனா வில்லியம்ஸின் டென்னிஸ் கெரியர் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ஜடேஜா..? ரசிகர்களை குஷிப்படுத்திய ராகுல் டிராவிட்டின் அப்டேட்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் அபாரமாக ஆடி பட்டங்களை வாரி குவித்தவர் செரீனா வில்லியம்ஸ். குறிப்பாக விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஓபன் ஆகியவற்றில் தலா 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் செரீனா. ஃப்ரெஞ்ச் ஓபனில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என மொத்தமாக 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் செரீனா வில்லியம்ஸ்.

இதையும் படிங்க - IND vs PAK: தம்பி நீயெல்லாம் சரியா வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் செரீனா. 2000 சிட்னி ஒலிம்பிக்கில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக்கில் தங்கம், கோல்டன்ஸ்லாம் பட்டம் என டென்னிஸில் அனைத்துவிதமான பட்டங்களையும் வென்றவர் செரீனா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!