வெளிச்சம் இல்லாமல் நின்ற போட்டிகள் நிறைய இருக்கு.. ஓவரான வெளிச்சத்தால் நின்ற போட்டி இதுதான்!!

By karthikeyan VFirst Published Jan 23, 2019, 5:09 PM IST
Highlights

கிரிக்கெட் ஆடுகளங்கள் அனைத்துமே வடக்கு - தெற்கு திசையில்தான் இருக்கும். ஆனால் நேப்பியர் மெக்லீன் பார்க் ஆடுகளம் மட்டும்  கிழக்கு - மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அரிய சம்பவம் ஒன்று நடந்தது. பொதுவாக போதிய வெளிச்சம் இல்லாமலோ அல்லது மழை காரணமாகவோத்தான் ஆட்டம் தடைபடும். ஆனால் நேப்பியரில் நடந்த இன்றைய போட்டியில் சூரியன் சுட்டெரித்ததால் பேட்ஸ்மேன்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் போட்டி தடைபட்டது. 

கிரிக்கெட் ஆடுகளங்கள் அனைத்துமே வடக்கு - தெற்கு திசையில்தான் அமைக்கப்படும். ஆனால் நேப்பியர் மெக்லீன் பார்க் ஆடுகளம் மட்டும்  கிழக்கு - மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சூரியன் மறையும் நேரத்தில் நேராக பேட்ஸ்மேன் அல்லது பவுலர் முகத்தில் அடிக்கும். அதனால் ஆடுகளத்தின் கிழக்கு திசையில் பேட்டிங் ஆடும் அல்லது பந்துவீசும் வீரர்களுக்கு சூரிய வெளிச்சம் இடையூறாக இருக்கும். ஃபெர்குசன் வீசிய 11வது ஓவரை தவான் எதிர்கொண்டார். அப்போது நேராக தவானின் முகத்தில் சூரிய ஒளி பட்டதால் அவரால் பேட்டிங் ஆடமுடியவில்லை. இதையடுத்து போட்டி நடுவர்கள் சூரியன் மறையும் வரை போட்டியை நிறுத்தினர். அதனால் டக்வொர்த் முறைப்படி ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவரில் 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை இந்திய அணி எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 

பொதுவாக போதிய வெளிச்சமில்லாமல் போட்டி நிறுத்தப்படும். ஆனால் ஓவரான வெளிச்சத்தால் இன்றைய போட்டி தடைபட்டது. இதே மைதானத்தில் இதேபோல் ஏற்கனவே ஒன்றிரண்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 
 

click me!