கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்ட தமிழக மாணவிகள் 6 சாதனைகளை தகர்த்த நிலையில், சான்றிதழ் பெற்றுள்ளனர்.
லண்டன் சென்று சாதனை படைக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மமதி வினோத் (8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜனனி சரவணா (14) ஆகியோர் லண்டன் புறப்பட்டுச் சென்று கின்னஸ் தலைமையகத்திற்கு சென்றனர். ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர் ஸ்கேடிங் என்று தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி 9 சாதனைகளை முறியடிக்க முயற்சித்தனர். எனினும், அவர்களால் 6 சாதனைகளை மட்டுமே முறியடிக்க முடிந்துள்ளது.
சனி மஹா பிரதோஷம்: எம்பெருமான் ஈசனை தரிசனம் செய்த கோலி - அனுஷ்கா சர்மா!
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த கின்னஸ் உலக சாதனை அலுவலர்கள் முன்பு தங்களது திறமைகளை இவர்கள் மூவரும் வெளிப்படுத்தினர். அதற்கு கிடைத்த பரிசாக, சான்றிதழ்கள் பெற்று திரும்பியுள்ளனர். இது குறித்து மமதி வினோத் கூறியிருப்பதாவது: கின்னஸ் சாதனைக்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். இந்த முயற்சி எதிர்காலத்தில் எங்களுக்கு ஊக்கமளிக்கும்.
ஜிம்னாஸ்டிக்ஸ் மீது எங்களுக்குள் இருக்கும் ஆர்வம், உலக சாதனைகளை படைக்க முயற்சிகள் மேற்கொள்ள வைக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.