ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் ஷிவம் லோககரே வெள்ளி வென்றுள்ளார்.
தென்கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் 53.31 வினாடிகளில் ஓடி இந்தியாவின் ஹீனா மல்லிக் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். இதே போன்று ஆண்களுக்கான வட்டி எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2ஆவது தங்கம் வென்றார்.
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், தவறான தகவலை பரப்பாதீர்கள்: சாக்ஷி மாலிக்!
பெண்களுக்கான 5000 மீ தடகளப் இந்தியாவின் அந்திமா பால் வெண்கலம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். அவர் 17:17.11 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். புஷ்ரா கான் கௌரி 18:15.98 வினாடிகளில் கடந்து 5ஆவது இடன் பிடித்துள்ளார்.
நள்ளிரவில் அமித் ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு; சட்டம் தன் பணியைச் செய்யும் என உறுதி
இந்தப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற யோனேசவா நானகா மற்றும் மட்சுமோட்டோ அகாரி ஆகியோர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஷிவம் லோககரே வெள்ளி வென்றுள்ளார். அவர் 72.34 மீ., தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி வென்றார். இதே போன்று மற்றொரு வீரர் மோகித் சவுத்ரி 62.72 மீட்டர் தூரம் எறிந்து 7வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டீம் இந்தியாவுக்கு குட் நியூஸ்; WTC இறுதிப் போட்டியிலிருந்து ஆஸி, வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல்!
யெச்சியோனில் 2வது நாள் நடந்த ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிவம் லோககரே 72.34 மீ., தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி வென்றார். மோகித் சவுத்ரி 62.72 மீட்டர் தூரம் எறிந்து 7வது இடம் பிடித்தார். … pic.twitter.com/Uz7PGNzOzC
— Asianetnews Tamil (@AsianetNewsTM)