டீம் இந்தியாவுக்கு குட் நியூஸ்; WTC இறுதிப் போட்டியிலிருந்து ஆஸி, வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல்!

By Rsiva kumar  |  First Published Jun 5, 2023, 2:21 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.


நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஜோஷ் ஹேசில்வுட். அவர், 3 போடிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். ஆஸ்திரேலியா விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளில் ஜோஷ் ஹேசில்வுட் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

சச்சின், கோலி மற்றும் சுப்மன் கில் இவர்களில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்?

Tap to resize

Latest Videos

ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் மீண்டு வரும் ஹேசில்வுட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் முழு உடல் தகுதி அடையாத நிலையில், விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக மாற்று வீரராக மைக்கேல் நேசர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து விலகவில்லை.

சுப்மன் கில்லுக்காக லண்டன் வரை வந்த சாரா டெண்டுல்கர்?

click me!