அஜர்பைஜானில் நடந்த FIDE உலகக் கோப்பை 2023ல் அரையிறுதிப் போட்டியில் டை பிரேக்கரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியை எட்டிய இளம் செஸ் வீரராக இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா, வரலாற்று புத்தகங்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகக் கோப்பை செஸ் அரையிறுதிப் போட்டியில் 31 வயதான அமெரிக்கா இத்தாலியன் ஃபேபியானோ கருவானாவை டை பிரேக்கரில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார். கார்ல்சன் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்தின் சாதனைகளுக்குப் பிறகு செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ஆர் பிரக்ஞானந்தா முன்னேறியிருப்பது அவருக்கு மட்டுமின்றி அவரது பெற்றோர்களான ரமேஷ்பாபு மற்றும் நாகலட்சுமி ஆகியோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Asia Cup 2023: ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு!
உலக தரவரிசைப் பட்டியலில் நம்பர் 2 இடத்தில் இருக்கும் ஹிகாரு நகமுரா மற்றும் உலகின் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானா ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஆர் பிரக்ஞானந்தா. பிரக்ஞானந்தாவுடன் அவரது அம்மா இருக்கிறார். ஆனால், நான் இங்கு சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாள் இரவிலும் பிரக்ஞானந்தா என்னை தொலைபேசியில் அழைத்து நடந்தவற்றை என்னிடம் பகிர்ந்து கொள்வார். நான், அவரது போட்டி பற்றி எதையும் கேட்பதில்லை. மாறாக, சரியாக சாப்பிட்டிருக்கிறானா என்பதை மட்டுமே நான் கேட்பேன்.
Jailer: ரஜினியின் தீவிர ரசிகர்; அயர்லாந்தில் ஜெயிலர் படம் பார்த்த சஞ்சு சாம்சன்!
பிரக்ஞானந்தாவிற்கு இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நான் ஒரு போதும் பரிந்துரை செய்ததில்லை. இது அவரது பயிற்சியாளரது பணி. பெரிய பெரிய போட்டிகளில் பங்கேற்கும் போது பிரக்ஞானந்தா ஒரு போதும் பயப்படுவதில்லை. அவருக்கு 18 வயதாகிறது. எந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்று நன்கு அறிவார். சிறு வயது முதலே விளையாடி வரும் இறுதி முடிவை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்று பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூறியுள்ளார்.
50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்!