Praggnanandhaa: டை பிரேக்கரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா!

By Rsiva kumar  |  First Published Aug 22, 2023, 9:43 AM IST

உலகக் கோப்பை செஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் டை பிரேக்கரில் வெற்றி பெற்ற இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற பகுதியில் உலகக் கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது வரும் 24 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், குகேஷ், விதித் குஜராத்தி, ஆர் பிரக்ஞானந்தா, நிகால் சரின், சுனில்தத் லைனா நாராயணன் ஆகியோர் உள்பட மொத்தமாக 206 செஸ் பிளேயர்ஸ் இடம் பெற்றனர்.

Asia Cup 2023: ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ஆர் பிரக்ஞானந்தா, உலக தரவரிசைப் பட்டியலில் 3ஆவது நிலை வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார். இதில், பிரக்ஞானந்தா ஒயிட் காயின்களுடன் விளையாடினார். 47ஆவது மூவின் போது போட்டியானது டிரா செய்யப்பட்டது.

Jailer: ரஜினியின் தீவிர ரசிகர்; அயர்லாந்தில் ஜெயிலர் படம் பார்த்த சஞ்சு சாம்சன்!

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இதில், பிரக்ஞானந்தா 3.5-2.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் உலக தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார்.

50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்!

click me!