ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தை சஞ்சு சாம்சன் அயர்லாந்தில் பார்த்து ரசித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் பல வசூல் சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகிறது. முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்து ஜெயிலர் திரைப்படம் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்!
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கிய படம் தான் ஜெயிலர். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, சரவணன், வசந்த் ரவி, மிர்ணா மேனன், விநாயகன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த 10 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படத்தை குடும்பத்தோடு சென்று ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
ரிங்கு சிங் – திலக் வர்மா, யார் டி20 போட்டிகளில் சிறந்தவர்?
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சக்ஸஸ் மீட் நடந்தது. இந்த நிலையில், தற்போது அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவெ முதல் டி20 போட்டியில் இந்தியா டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 2 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஆட வந்தார். அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அயர்லாந்தில் சஞ்சு சாம்சன், ஜெயிலர் படம் பார்த்ததாக குறிப்பிட்டனர். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன் சிறு வயது முதல் ரஜினிகாந்த் படங்களை பார்த்து வந்துள்ளார்.
வானவேடிக்கை காட்டிய ரிங்கு சிங், ஷிவம் துபே – இந்தியா 185 ரன்கள் குவிப்பு!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று பார்த்துள்ளார். இந்த நிலையில், அயர்லாந்தில் ஜெயிலர் படத்திற்கு சிறப்பு விருந்தினராக சென்று ரஜினிகாந்த் படத்தை பார்த்து ரசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 23 ஆம் தேதி நடக்கிறது.
உலகக் கோப்பையில் அட்டவணையில் மாற்றமா? பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்!
commentators talking about movie &
Commentator 1: watched the premier of his Favorite star movie jailer. Such a proud moment to br a guest of honor.
Commentator 2 : watched the snipet from the movie wonderful !! pic.twitter.com/WRI62eohIN