அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் தனது முதல் சர்வதேச போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகளில் முறையே 39, 51, 49, 7 மற்றும் 27 என்று மொத்தமாக 173 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியைத் தொடர்ந்து, அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
பும்ரா, பிரசித் கிருஷ்ணா வேகத்தில் சுருண்ட அயர்லாந்து; தொடரையும் இழந்த பரிதாபம்!
இதுவரையில் விளையாடிய 2 டி20 போட்டிகளில் அவர் 0 மற்றும் 1 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனினும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி 23 ஆம் தேதி நடக்க உள்ளது.
வானவேடிக்கை காட்டிய ரிங்கு சிங், ஷிவம் துபே – இந்தியா 185 ரன்கள் குவிப்பு!
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், ரிங்கு சிங்கிற்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் தொடர்களில் 5 அல்லது 6ஆவது இடத்தில் களமிறங்கி விளையாடிய ரிங்கு சிங் நேற்றைய போட்டியில் 5 ஆவது இடத்தில் களமிறங்கினார். அதில், அவர் 21 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் சேர்த்தார். முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியது. வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக ஓய்வில் இருந்து தனத உடல்தகுதியை நிரூபித்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செலக்ஷன் கமிட்டி மீட்டிங்கில் கலந்து கொள்ளும் ரோகித் சர்மா: ஆசிய கோப்பைக்கு யார் யாருக்கு வாய்ப்பு?