வானவேடிக்கை காட்டிய ரிங்கு சிங், ஷிவம் துபே – இந்தியா 185 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Aug 20, 2023, 10:16 PM IST

அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.


இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று டப்ளின் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 58 அன்கள் எடுத்தார். மற்றொரு வீரர் சஞ்சு சாம்சன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Spain vs England FIFA WWC: முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மகுடம் சூடிய ஸ்பெயின்!

Tap to resize

Latest Videos

கடைசியாக வந்த ஐபிஎல் ஹீரோ ரிங்கு சிங், ஐபிஎல் தொடரிலிருந்து விட்ட இடத்திலிருந்து தொடங்கி அடுத்தடுத்து சிக்ஸர் பறக்கவிட்டார். அவர் 21 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரி உள்பட 38 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்தி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது. தற்போது வரையில் அயர்லாந்து அணி 11 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

செலக்‌ஷன் கமிட்டி மீட்டிங்கில் கலந்து கொள்ளும் ரோகித் சர்மா: ஆசிய கோப்பைக்கு யார் யாருக்கு வாய்ப்பு?

click me!