பி.டி.உஷாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் - கேரளாவின் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Published : Mar 22, 2023, 05:00 PM ISTUpdated : Mar 22, 2023, 05:04 PM IST
பி.டி.உஷாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் -  கேரளாவின் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!

சுருக்கம்

கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் கௌரவ டாக்டர் பட்டம் இந்திய தடகள வீராங்கனை பிடி உஷாவிற்கு வழங்கப்பட இருக்கிறது.   

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள குத்தாலி என்ற பகுதியில் பிறந்தார். இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிக் பல தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இவர், பய்யோலி எக்ஸ்பிரஸ், கோல்டன் கேர்ள் என்று பிரபலமாக அறியப்படுகிறார். விளையாட்டுத்துறையில் அவர் செய்த முன்மாதிரியான பங்களிப்பிற்காக அவரை கவுரவிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 58 வயதான உஷா, முன்னாள் இந்திய ரயில்வே அதிகாரி இருந்துள்ளார். தற்போது ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினராக உள்ளார்.

IND vs AUS Chennai ODI: ரூ. 1500 டிக்கெட்டை ரூ.10000க்கு விற்ற 12 பேர் கைது; போலீஸ் அதிரடி நடவடிக்கை!

கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 19 தங்கம் உட்பட 33 பதக்கங்களை வென்றுள்ளார். தொடர்ந்து நான்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு நடந்த  ஜகார்த்தா ஆசிய தடகளப் போட்டியில் 5 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றார்.

வாய்ப்பு எப்போவாவது தான் வரும்: கைல விழுந்த கேட்சை கோட்டை விட்ட கில்; கச்சின்னு பிடிச்ச குல்தீப் யாதவ்!

இவர், தனது சொந்த மாவட்டமான கோழிக்கோடு கினாலூரில் உஷா தடகளப் பள்ளியை நிறுவினார். மேலும் அவரது வார்டுகள் இதுவரை நாட்டிற்காக 79 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளன. இந்த நிலையில், இவருக்கு, கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் கௌரவ டாக்டர் பட்டம் இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. உஷாவை கௌரவிக்கும் விழாவை ஏற்பாடு செய்ய மத்திய பல்கலைக்கழகம் தற்போது வசதியான தேதியை முடிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு எப்போவாவது தான் வரும்: கைல விழுந்த கேட்சை கோட்டை விட்ட கில்; கச்சின்னு பிடிச்ச குல்தீப் யாதவ்!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!