IND vs AUS Chennai ODI: ரூ. 1500 டிக்கெட்டை ரூ.10000க்கு விற்ற 12 பேர் கைது; போலீஸ் அதிரடி நடவடிக்கை!

By Rsiva kumar  |  First Published Mar 22, 2023, 4:25 PM IST

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் ஒரு நாள் போட்டிக்கான ரூ.1500 டிக்கெட்டை ரூ.10000க்கு விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் ஆடி வருகிறது. டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

கேஎல் ராகுலுக்கு என்ன ஆச்சு? விக்கெட் கீப்பரான இஷான் கிஷான்!

Tap to resize

Latest Videos

இருவரும், மாறி மாறி பவுண்டரியும், சிக்சரும் விளாசினர். 10 ஓவர்கள் வரையில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு வந்த ஹர்திக் பாண்டியா தொடக்க வீரர்களின் விக்கெட் மட்டுமின்றி ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

வாய்ப்பு எப்போவாவது தான் வரும்: கைல விழுந்த கேட்சை கோட்டை விட்ட கில்; கச்சின்னு பிடிச்ச குல்தீப் யாதவ்!

தற்போது வரையில் ஆஸ்திரேலியா 31 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இந்த  போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. அதோடு, குறைந்தது ரூ.1200 என்றும், அதிகபட்சமாக ரூ.10000 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்காகவே கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கூடினர். காலை 11 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. கிரிக்கெட் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வாய்ப்பு எப்போவாவது தான் வரும்: கைல விழுந்த கேட்சை கோட்டை விட்ட கில்; கச்சின்னு பிடிச்ச குல்தீப் யாதவ்!

40 ஆண்டுகளாக கிரிக்கெட் மீதான ஆர்வம் கொண்ட கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரது கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற கனவை அவரது மகன் நிறைவேற்றியிருக்கிறார் என்று செய்தி வெளியானது. இந்த நிலையில் ரூ.1500 கொண்ட டிக்கெட்டை ரூ.10,000க்கு விற்பனை செய்த 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.1200 முதல் ரூ.10000 வரை விற்பனை- 3ஆவது போட்டிக்கு டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!

click me!