ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் 15 ஓவர்கள் வரையில் கீப்பிங் செய்த கேஎல் ராகுல் 16ஆவது ஓவர் முதல் வரவில்லை.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்று சமநிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது.
இதில் பவர்பிளேயான முதல் 10 ஓவர்கள் வரையில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. மாறாக, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலியா முதல் 10 ஓவருக்கு 61 ரன்க்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 11ஆவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார். இவரது ஓவரில் டிராவிஸ் ஹெட் (33) ஆட்டமிழந்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ரஜினியின் பேட்ட சாங்: மரணம் மாஸ் மரணம் பாடலுக்கு உள்ளே வந்த பிளேயர்ஸ்!
இதே போன்று, ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டையும் ஹர்திக் பாண்டியா எடுத்தார். கடந்த 2 ஆவது ஒரு நாள் போட்டியில் சீன் அபாட் வீசிய பந்தில் ஹர்திக் பாண்டியா ஸ்லிப் பக்கமாக திருப்ப அங்கு நின்றிருந்த ஸ்மித் கச்சிதமாக கேட்ச் பிடித்து பாண்டியாவை 1 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாண்டியாவின் 13 ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 14.3 ஓவரில் மிட்செல் மார்ஷை அரைசதம் அடிக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தார்.
சென்னையில் 50 ஆவது போட்டி: சாதிக்குமா இந்தியா? வார்னரை களமிறக்கிய ஆஸ்திரேலியா பேட்டிங் ஃபர்ஸ்ட்!
ஆரம்பம் முதலே பவுண்டரியும், சிக்சரும் அடித்து வந்தவர் மிட்செல் மார்ஷ். 47 பந்துகளில் அவர் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 47 ரன்கள் குவித்தார். ஹர்திக் ஓவரில் கிளீன் போல்டானார். இதன் மூலம் முதல் 3 விக்கெட்டுகளையும் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா எடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியா ஓவர் முடிந்த பிறகு கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை. அவருக்கு என்ன நடந்தது? ஏது நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதன் காரணமாக 16ஆவது ஓவரிலிருந்து இஷான் கிஷான் விக்கெட் கீப்பர் பணியை செய்தார். தற்போது 27 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 130 ரன்கள் எடுத்துள்ளது.
IND vs AUS Chennai 3rd ODI: போட்டிக்கு நடு நடுவில் மழை பெய்ய வாய்ப்பு - போட்டியில் பாதிப்பு வருமா?