Pro Kabaddi League: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ் தலைவாஸ் அணி..! அரையிறுதி போட்டி விவரம்

Published : Dec 14, 2022, 02:14 PM IST
Pro Kabaddi League:  முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ் தலைவாஸ் அணி..! அரையிறுதி போட்டி விவரம்

சுருக்கம்

புரோ கபடி லீக் பிளே ஆஃப் போட்டியில் யு.பி யோதாஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.  

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

புள்ளி பட்டியலில் அடுத்த 4 இடங்களை பிடித்த பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ், தமிழ் தலைவாஸ், டபாங் டெல்லி அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின. 

FIFA World Cup: மெஸ்ஸி, அல்வரெஸ் அபாரம்.. அரையிறுதியில் குரோஷியாவை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா

முதல் பிளே ஆஃப் போட்டியில் பெங்களூரு புல்ஸும் டபாங் டெல்லியும் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே டபாங் டெல்லி அணி மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி 56-24 என்ற கணக்கில் டபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களுரு புல்ஸ்.

அடுத்த பிளே ஆஃப் போட்டியில் தமிழ் தலைவாஸும் யு.பி யோதாஸும் மோதின. பரபரப்பான இந்த போட்டி 36-36 என டையில் முடிந்தது. நாக் அவுட் போட்டி என்பதால் போட்டி முடிவை பெறுவதற்காக டை பிரேக்கில் 5 ரைடுகள் வழங்கப்பட்டன. அதில் 3-2 என தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

FIFA World Cup 2022: வாழ்நாள் கனவு தகர்ந்தது - ரொனால்டோ உருக்கம்

நாளை(டிசம்பர் 15) அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் முதல் அரையிறுதியிலும், புனேரி பல்தான் - தமிழ் தலைவாஸ் அணிகள் அடுத்த அரையிறுதி போட்டியிலும் மோதுகின்றன.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!