BAN vs IND: முதல் டெஸ்ட் டாஸ் ரிப்போர்ட்.. 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்திய அணி

By karthikeyan VFirst Published Dec 14, 2022, 9:29 AM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. 

ஐசிசி டெஸ்ட்  சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க, வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பதால் வெற்றி முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

பிசிசிஐக்கு நிகரான ஊதியம், வீடு, கார் எல்லாம் தருகிறோம்..! அயர்லாந்தின் கோரிக்கையை நிராகரித்த சஞ்சு சாம்சன்

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரனமாக ஆடாததால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுகிறார். டாஸ் வென்ற கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி அஷ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறது. உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் மட்டுமே ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுகின்றனர்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

வங்கதேச அணி:

ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ்,  டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, எபடாட் ஹுசைன்.
 

click me!