FIFA World Cup: மெஸ்ஸி, அல்வரெஸ் அபாரம்.. அரையிறுதியில் குரோஷியாவை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா

By karthikeyan V  |  First Published Dec 14, 2022, 9:44 AM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 


22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. அர்ஜெண்டினா, குரோஷியா, ஃபிரான்ஸ், மொராக்கோ ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

கிறிஸ்டியானா ரொனால்டோவை பென்ச்சில் உட்காரவைத்து விட்டு காலிறுதியில் ஆடிய போர்ச்சுகல் அணி மொராக்கோவிடம் தோற்று தொடரை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. இங்கிலாந்து அணி ஃபிரான்ஸிடம் தோற்று வெளியேறியது.

Tap to resize

Latest Videos

undefined

FIFA World Cup 2022: வாழ்நாள் கனவு தகர்ந்தது - ரொனால்டோ உருக்கம்

அர்ஜெண்டினா, குரோஷியா, மொராக்கோ, ஃபிரான்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அர்ஜெண்டினா - குரோஷியா இடையே முதல் அரையிறுதி போட்டி நடந்தது.

இந்த ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி முதல் கோல் அடித்தார். அடுத்த 5 நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

2ம் பாதி ஆட்டத்தில் 69வது நிமிடத்தில் அல்வரெஸ் மற்றுமொரு கோல் அடித்தார். தொடக்கம் முதல் கடைசி வரை கடுமையாக போராடியும் குரோஷியா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா ஃபைனலுக்கு முன்னேறியது.
 

click me!