FIFA World Cup 2022: வாழ்நாள் கனவு தகர்ந்தது - ரொனால்டோ உருக்கம்

By karthikeyan VFirst Published Dec 12, 2022, 5:55 PM IST
Highlights

போர்ச்சுகல் அணிக்காக ஃபிஃபா உலக கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற தனது கனவு தகர்ந்ததாக கிறிஸ்டியானா ரொனால்டோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.
 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட பிரேசில், போர்ச்சுகல் அணிகள் காலிறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறின.

சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் அர்ஜெண்டினா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்காமல் புஜாராவை நியமித்தது ஏன்..? கேஎல் ராகுல் விளக்கம்

தனது கடைசி உலக கோப்பையில் போர்ச்சுகலுக்கு எப்படியாவது கோப்பையை வென்று கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார் ரொனால்டோ. ஆனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் ரொனால்டோ பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் ரொனால்டோவுக்கு பதிலாக ஆடிய ராமோஸ் 3 கோல்களை அடித்து அசத்தினார்.

அதைத்தொடர்ந்து மொராக்கோவிற்கு எதிரான காலிறுதி போட்டியின் முதல் பாதி ஆட்டத்திலும் ரொனால்டோ களமிறக்கப்படாமல் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். அது ஆட்ட உத்தி என்று தெரிவித்தார் போர்ச்சுகல் பயிற்சியாளர் சாண்டோஸ். ஆனால் அந்த போட்டியின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணி கோல் அடிக்கவில்லை. மொராக்கோ அணி முதல் பாதியில் கோல் அடித்தது. 2ம் பாதியில் ரொனால்டோ களமிறங்கியும் கூட, அந்த  அணியால் கோல் அடிக்க முடியாததால் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது போர்ச்சுகல்.

உலக கோப்பை கனவு தகர்ந்ததையடுத்து, களத்திலிருந்து கண்ணீருடன் ரொனால்டோ வெளியேறிய சம்பவம், ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. ரொனால்டோ பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஃபிஃபா உலக கோப்பை தோல்விக்கு பின் அதுகுறித்து ரொனால்டோ வெளியிட்ட அறிக்கையில், போர்ச்சுகலுக்கு உலக கோப்பையை ஜெயித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் கனவு. நல்வாய்ப்பாக சர்வதேச போட்டிகளில் நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறேன். ஆனால் எனது பெரிய கனவான உலக கோப்பை கனவு நிறைவேறாமலே போனது. அதற்காக கடுமையாக போராடினேன். 5 உலக கோப்பைகளில் கோல் அடித்திருக்கிறேன். ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை. எனது முழு முயற்சி, உழைப்பு ஆகியவற்றை போர்ச்சுகலுக்காக வழங்கியிருக்கிறேன். போர்ச்சுகலின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், அவர்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கும் நன்றி. 

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

என் அணி வீரர்கள் கோல் அடிக்க உதவியிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக உலக கோப்பையை ஜெயிக்க முடியாமல் போனது. இந்த நேரத்தில் இதைத்தவிர கூறுவதற்கு எனக்கு வேறு எதுவும் இல்லை. அனைவருக்கும் நன்றி. போர்ச்சுகலுக்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
 

click me!