FIFA World Cup 2022: கண்ணீரும் கம்பலையுமாக முடிந்த காலிறுதி சுற்று..! அரையிறுதி போட்டி விவரம்

By karthikeyan V  |  First Published Dec 11, 2022, 3:38 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், அரையிறுதி போட்டி விவரங்களை பார்ப்போம்.
 


22வது  ஃபிஃபா கால்பந்து  தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. காலிறுதி சுற்று முடிந்து இறுதிக்கட்டத்தை நோக்கி உலக கோப்பை தொடர் நகர்கிறது.

அர்ஜெண்டினா, ஃபிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, மொராக்கோ, குரோஷியா, இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதி போட்டிகள் மிக விறுவிறுப்பாக இருந்தன. காலிறுதி சுற்றின் முதல் போட்டியில் குரோஷியாவிடம் பிரேசில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. அந்த போட்டி டிரா ஆனதால், பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசிலை குரோஷியா வீழ்த்தியது.

Latest Videos

undefined

FIFA World Cup 2022: காலிறுதியில் போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ! கண் கலங்கிய ரொனால்டோ

அர்ஜெண்டினா - நெதர்லாந்து இடையேயான அடுத்த போட்டியிலும் பெனால்டி ஷூட் அவுட் மூலம் தான் முடிவு எட்டப்பட்டது. நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. 3வது காலிறுதி போட்டியில் போர்ச்சுகலும் மொராக்கோவும் மோதின. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் கிறிஸ்டியானா ரொனால்டோ ஆடவில்லை. முதல் பாதியில் மொராக்கோ ஒரு கோல் அடித்த நிலையில், போர்ச்சுகல் கோல் அடிக்கவில்லை. 2ம் பாதியில் ரொனால்டோ களமிறங்கிய பின், எவ்வளவோ முயன்றும் போர்ச்சுகல் அணியால் கோல் அடிக்க முடியாமல் மொராக்கோவிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.

இதுதான் தனது கடைசி உலக கோப்பை என்பதால் இந்த உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ரொனால்டோவிற்கு இது பெரும் ஏமாற்றத்தை அளிக்க, களத்தில் கண்ணீர் விட்டு உடைந்து அழுதார் ரொனால்டோ. கண்ணீருடன் அவர் களத்தை விட்டு வெளியேறியது ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. 

கடைசி காலிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அர்ஜெண்டினா, குரோஷியா, மொராக்கோ மற்றும் ஃபிரான்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

FIFA World Cup 2022: காலிறுதி போட்டியின் முதல் பாதியில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட ரொனால்டோ.! இதுதான் காரணம்

அர்ஜெண்டினா - குரோஷியா அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி டிசம்பர் 14, 12.30 AM மணிக்கு தொடங்கி நடக்கிறது. மொராக்கோ - ஃபிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி டிசம்பர் 15, 12.30 AM மணிக்கு தொடங்கி நடக்கிறது.
 

click me!