Pro Kabaddi League: ஜெய்ப்பூர், புனே அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி.! தெலுங்கு டைட்டன்ஸை ஊதித்தள்ளிய தமிழ் தலைவாஸ்

By karthikeyan VFirst Published Dec 3, 2022, 10:27 PM IST
Highlights

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின. இன்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை 52-24 என்ற கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி பெற்றது.
 

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஹைதராபாத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அபாரமாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடியது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸுக்கு எதிராக புள்ளிகளை பெற ரொம்ப கஷ்டப்பட்டது. முழுக்க முழுக்க தெலுங்கு டைட்டன்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 52-24 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும்  புள்ளி பட்டியலில் தொடர்ந்து 5ம் இடத்தில் உள்ளது.

Pro Kabaddi League: யு மும்பா அணியை வீழ்த்தி யு.பி யோதாஸ் 3ம் இடத்திற்கு முன்னேற்றம்

புனேரி பல்தான் - டபாங் டெல்லி இடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்தன. கடைசியில் இந்த போட்டியில் புனேரி பல்தான் 47-44 என்ற கணக்கில் டபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் ஆகிய 2 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின. யு.பி யோதாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகிய 2 அணிகளும் 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 5ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
 

click me!