ப்ரோ கபடி 9வது சீசன் போட்டிகளை எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம்..? லைவ் ஸ்ட்ரீமிங் விவரம்

Published : Oct 06, 2022, 12:19 PM ISTUpdated : Oct 06, 2022, 02:37 PM IST
ப்ரோ கபடி 9வது சீசன் போட்டிகளை எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம்..? லைவ் ஸ்ட்ரீமிங் விவரம்

சுருக்கம்

ப்ரோ கபடி 9வது சீசன் நாளை தொடங்கும் நிலையில், கபடி போட்டிகளை எந்தெந்த சேனல்கள் மற்றும் ஆன்லைனில் எவற்றில் பார்க்கலாம் என்ற விவரங்களை பார்ப்போம்.  

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ஊக்குவிக்கும் விதமாகவும், தேசம் முழுக்க உள்ள கபடி வீரர்களுக்கான சிறப்பான தளத்தை அமைத்து கொடுப்பதற்காகவும் ப்ரோ கபடி தொடங்கப்பட்டது. 

2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ரோ கபடி தொடரின் 8 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 9வது சீசன் நாளை தொடங்குகிறது. 9வது சீசனில் மொத்தம் 12 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

இதையும் படிங்க - ப்ரோ கபடி 9வது சீசன்: எந்தெந்த அணிகள் எப்போது மோதுகின்றன..? முழு போட்டி அட்டவணை

ப்ரோ கபடி 9வது சீசனில் ஆடும் அணிகள்:

1. பெங்கால் வாரியர்ஸ்
2. பெங்களூரு புல்ஸ்
3. டபாங் டெல்லி
4. குஜராத் ஜெயிண்ட்ஸ்
5. ஹரியானா ஸ்டீலர்ஸ்
6.ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
7. பாட்னா பைரேட்ஸ்
8. புனேரி பல்தான்
9. தமிழ் தலைவாஸ்
10.தெலுங்கு டைட்டான்ஸ் 
11.யு மும்பா 
12. உ.பி யோதாஸ் 

ப்ரோ கபடி தொடரின் முதல் 41 போட்டிகள் பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்திலும், அதற்கடுத்த லீக் போட்டிகள் புனே ஷிவ்சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸிலும், ஹைதராபாத்திலும் நடக்கின்றன. பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ப்ரோ கபடி போட்டிகள் நடக்கின்றன.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

ப்ரோ கபடி போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 பங்களா(பெங்கால்), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் ஆகிய சேனல்களில் நேரலையாக பார்க்கலாம்.

ஸ்டார் நெட்வொர்க் ப்ரோ கபடி ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியிருப்பதால், ஆன்லைனில் Disney+Hotstar-ல் பார்க்கலாம். ஜியோ டிவி ஆப்-பிலும் ப்ரோ கபடி போட்டிகளை நேரலையாக பார்க்கலாம்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

கேரம் உலகக்கோப்பையின் தங்க மகள்..! சென்னை கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி அள்ளிக் கொடுத்த முதல்வர்!
நான் ஒன்றும் அவுட் ஆஃப் பார்ம் இல்லை.. ஜஸ்ட் ரன் அவுட் தான்.. மனம் தளராத சூர்யகுமார் யாதவ்