அஜிங்க்யா ரஹானேவுக்கு ஆண் குழந்தை..!

By karthikeyan VFirst Published Oct 6, 2022, 11:15 AM IST
Highlights

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானேவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அனைவரது அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஹானே.
 

இந்திய அணியின் சீனியர் கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே. 2011ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ரஹானே, 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2018ம் ஆண்டுக்கு பின் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளில் ரஹானே ஆடவில்லை.

ஆனால் டெஸ்ட் அணியின் முன்னணி மற்றும் முக்கியமான  வீரராக திகழ்ந்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு சாதனைகளை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் 2020-2021ல் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தார்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

இந்திய அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சுமார் 5000 ரன்களை குவித்துள்ள ரஹானே, ஃபார்மில் இல்லாமல் சரியாக ஆடாமல் தொடர்ச்சியாக சொதப்பியதன் விளைவாக, இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஆனால் இப்போது உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.

உள்நாட்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி மகிழ்ச்சியில் இருக்கும் அஜிங்க்யா ரஹானேவுக்கு, டபுள் மகிழ்ச்சியாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அஜிங்க்யா ரஹானே - ராதிகா தம்பதிக்கு 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை இன்ஸ்டாகிராமில் தெரிவித்த அஜிங்க்யா ரஹானே, தங்கள் மீது அன்பு காட்டிய மற்றும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
 

click me!