பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 5ஆம் நாளான இன்று இந்தியா துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 4 நாட்கள் முடிவில் இதுவரையில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இதில் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் முதல் வெண்கலப் பதக்கத்தை இந்தியாவிற்கு வென்று கொடுத்தார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலமாக இந்தியா 2ஆவது வெண்கலப் பதக்கம் வென்றது.
வில்வித்தையில் அங்கீதா பகத் அதிர்ச்சி தோல்வி – பஜன் கவுர் 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!
இந்த நிலையில் தான் 5ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, வில்வித்தை, குதிரையேற்றம் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொஷிசன்ஸ் தகுதிச் சுற்று
பிற்பகல் 12.30 மணி – ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ஸ்வப்னில் குசலே
மகளிருக்கான டிராப் தகுதிச் சுற்று – டே 2
பிற்பகல் 12.30 மணி – ஷ்ரேயாசி சிங், ராஜேஸ்வரி குமாரி
பேட்மிண்டன்: மகளிர் ஒற்றையர் பிரிவு
பிற்பகல் 12.50 மணி – பிவி சிந்து vs கிறிஸ்டின் குயூப் (எஸ்டோனியா)
பிற்பகல் 1.40 மணி – ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு
லக்ஷயா சென் vs ஜோனாதன் கிறிஸ்டி (இந்தோனேசியா)
இரவு 11 மணி - ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று
ஹெச் எஸ் பிரணாய் vs டக் பாட் லீ (வியட்நாம்)
ரோவிங்: ஆண்களுக்கான படகு போட்டி அரையிறுதிப் போட்டி
பிற்பகல் 1.24 மணி: பால்ராஜ் பன்வார்
டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவு சுற்று 32
பிற்பகல் 2.20 மணி – ஸ்ரீஜா அகுலா vs ஜியான் ஜெங் (சிங்கப்பூர்)
குத்துச்சண்டை: மகளிருக்கான 75கிலோ எடைப்பிரிவு சுற்று 16
பிற்பகல் 3.50 மணி - லோவ்லினா போர்கோஹைன் vs சன்னிவா ஹோஃப்ஸ்டாட் (நார்வே)
ஆண்களுக்கான 71கிலோ எடைப்பிரிவு
ஆகஸ்ட் 01, நள்ளிரவு 12.18 மணி: நிஷாந்த் தேவ் vs ஜோஸ் கேப்ரியல் ரோட்ரிக்ஸ் டெனோரியோ (ஈக்வடார்)
இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த சரப்ஜோத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
வில்வித்தை: மகளிருக்கான தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று
பிற்பகல் 3.56 மணி – தீபிகா குமாரி vs ரீனா பர்னாட் (எஸ்தோனியா)
ஆண்களுக்கான தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று
இரவு 9.15 மணி – தருண்தீப் ராய் vs டாம் ஹால் (இங்கிலாந்து)