மகளிருக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா பகத் தரவரிசை சுற்று போட்டியில் 4-6 என்று தோல்வி அடைந்து ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 4ஆவது நாள் போட்டிகள் முடியும் தருவாயில் உள்ளது. இன்று துப்பாக்கி சுடுதலில் டிராப், 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர், ரோவிங், குத்துச்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது. இதில், துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இந்தியாவிற்கு 2ஆவது வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது.
undefined
இதன் மூலமாக ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற 4ஆவது நாளில் வில்வித்தை போட்டியில் தகுதிச் சுற்றில் மகளிருக்கான தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கீதா பகத் போலந்து நாட்டை சேர்ந்த வயோலெட்டா மைஸோரை எதிர்கொண்டார். இதில், அங்கீதா 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து 11ஆவது இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியுள்ளார்.
இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த சரப்ஜோத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
இதே போன்று மகளிருக்கான தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பஜன் கவுர் சுற்றுக்கு 16க்கு முன்னேறியுள்ளார். இதில் வெற்றி பெற்றால் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக வில்வித்தையில் அணியாக நடைபெற்ற போட்டியில் பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.