Wasim Akram:மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: மறக்க முடியாத 1999 சென்னை டெஸ்ட்: வாசிம் அக்ரம் நினைவு

By Pothy RajFirst Published Feb 27, 2023, 2:40 PM IST
Highlights

இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டித் தொடர்களை தொடங்க வேண்டும், இரு நாடுகளைச் சேர்ந்த அதிகமான மக்கள் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்

இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டித் தொடர்களை தொடங்க வேண்டும், இரு நாடுகளைச் சேர்ந்த அதிகமான மக்கள் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்

தி இந்து (ஆங்கிலம்) சார்பில் லிட் ஃபார் லைப் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பங்கேற்றார். அது மட்டுமல்லாமல் வாசிம் அக்ரம், பத்திரிகையாளர் கின் ஹெய் எழுதிய சுல்தான் நாவல் குறித்து இ்ந்த நிகழ்ச்சியில் பேசி பல விஷயங்களை நினைவு கூர்ந்தார். தி இந்து குழுமத்தின் இயக்குநர் பத்திரிகையாளர் என் ராம் நிகழ்ச்சியை தொகுத்தார்.

வாசிம் அக்ரம் பேசுகையில் “இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாக எடுத்துக்கொண்டார். 150 கோடி மக்கள், கிரிக்கெட் போட்டியில் இணைவார்கள். இது ஒரு வித்தியாசமான அழுத்தம். இதுதான் இந்தியா, பாகிஸ்தான் விளையாட்டின் அழகு, இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் மீண்டும் நடக்கும் என நம்புகிறேன். சில தளங்களில் அரசியலை விளையாட்டில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும், இரு நாட்டு மக்களும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுதல் மிகவும் முக்கியமானது.

சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் என் மீது காட்டிய அன்பு, அக்கறையை மறக்கவேமாட்டேன்! வாசிம் அக்ரம் உருக்கம்

நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல கடினமான சவால்களைக் கடந்துள்ளேன். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு, மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு என பல பழிகள் என் மீது விழுந்தன. என்னுடைய போராட்டங்களைப் பற்றிப் பேசுவது கடினமானது, எனக்கிருக்கும் போதைமருந்து பழக்கத்திலிருந்து வெளியேறவே இந்தப் புத்தகத்தை எழுதினேன்  . என்னுடைய புத்தகம் ஒருவரை ஊக்கப்படுத்தினால், என்னுடைய பணி முடிந்துவிட்டது என்று அர்த்தம்” எனத் தெரிவித்தார்

கடந்த 1999ம் ஆண்டு சென்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. 5வது நாள்வரை சென்ற டெஸ்ட்  போட்டியில் வெற்றியை விட்டுவிடாமல் சச்சின் கடைசிவரை போராடினார். ஆனால், அவர் போராட்டம் தோல்வியில் முடிந்ததோடு, இந்தியாவின் தோல்வியும் உறுதியானது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 238 ரன்களும், இந்திய அணி 254 ரன்களும் எடுத்து இந்திய அணி 16 ரன்கள் முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 286 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு 271 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. இந்திய அணியில் ராகுல் திராவிட், லட்சுமண், சடகோபன் ரமேஷ், கங்குலி, அசாருதீன் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனால், மனம் தளராத சச்சின் 136 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் நயன்மோங்கியா 52 ரன்கள் சேர்த்து சச்சினுக்கு துணையாக இருந்தார்.

என்னை சலீம் மாலிக் வேலைக்காரன் போல் நடத்தினார்..! வாசிம் அக்ரம் குற்றச்சாட்டுக்கு சலீம் மாலிக்கின் ரியாக்‌ஷன்

இந்தஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரை ஆட்டமிழக்கச் செய்ய பாகிஸ்தான் வீரர்கள் கடும் பிரயத்தனம் செய்தும்முடியவில்லை. இறுதியாக சக்லைன் முஸ்டாக் பந்துவீச்சில் சச்சின் முதுகுவலி தாங்கமுடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். பாகிஸ்தான்12 ரன்னில் வென்றது.

கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத இந்த டெஸ்ட் போட்டியை பற்றி வாசிம் அக்ரம் பேசுகையில் “ சென்னை டெஸ்ட் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். வெப்பான சூழல், கடினமான ஆடுகளம் என எங்களுக்கு ஏற்றார்போலவும், ரிசர்வ்ஸ் ஸ்விங் செய்ய ஏற்றதாக இருந்தது. எங்களிடம் அந்தநேரத்தில் சக்லைன் முஷ்டாக் என்ற சிறந்த சுழற்பந்துவீச்சாளர் இருந்தார். தூஷ்ரா பயன்படுத்தப்பட்ட அந்த நேரத்தில் எந்த பேட்ஸ்மேனாலும் அதை சமாளித்து ஆடமுடியவில்லை.

சச்சின் முதல் இன்னிங்ஸிலும் பிரமாதமாக ஆடினார், சக்லைன் தூஷ்ரா வீசினாலே சச்சின் காலை மடக்கிஸ்வீப் செய்து விளாசிவிடுவார். தூஷ்ராவை விளையாடுவதில் சச்சின் ஒரு மாஸ்டர். இதனால்தான் சச்சின் அனைத்து காலத்திலும் சிறந்த வீரராக இருக்கிறார்

இந்திய அணி 2007க்குப் பின் டி20 உலக கோப்பையை வெல்ல முடியாததற்கு ஐபிஎல் தான் காரணம்..! வாசிம் அக்ரம் கருத்து

போட்டி முடியும் தருவாயில் இருந்தது. இந்திய அணிவெல்ல 20 ரன்கள் தேவை. சச்சிந் களத்தில் 136 ரன்களுடன் இருந்தார். நான் சக்லைனிடம் பேசி, தூஷ்ரா வீசக் கேட்டேன். பவுண்டரியில் ஒரு பீல்டரை நிறுத்தினேன். சக்லைன் தூஷ்ரா வீசியவுடன் சச்சின் அடித்த ஷாட் மிட்விக்கெட்டில் கேட்சானது. 42 ஆயிரம் மக்கள் போட்டி பார்த்து சத்தமிட்டனர். இந்தியாவின் தோல்வியை மக்களால் தாங்க முடியவில்லை. எங்களுக்கு இந்த சென்னை டெஸ்ட் எப்போதும் சிறப்பானது. சென்னை மக்களுக்கு மீண்டும் நன்றி”
இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்தார்


 

click me!