உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம்.. பிர்சா முண்டா ஸ்டேடியம் கின்னஸ் சாதனை

By karthikeyan VFirst Published Jan 29, 2023, 4:27 PM IST
Highlights

உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது, ஒடிசாவில் அமைந்துள்ள பிர்சா முண்டா ஸ்டேடியம்.
 

ஹாக்கி உலக கோப்பை போட்டிகள் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இன்றுடன் உலக கோப்பை தொடர் முடிவடைகிறது. இன்றிரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு நடக்கும் ஃபைனலில் ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

ஹாக்கி உலக கோப்பை ஒடிசாவில் நடந்ததால், அதற்காக ரூர்கேலாவில் ரூ.200 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது பிர்சா முண்டா ஸ்டேடியம். 

IND vs NZ: ஃபினிஷிங் ரோலுக்கு தீபக் ஹூடா சரியா வரமாட்டார்.. அந்த பையனை இறக்குங்க..! தினேஷ் கார்த்திக் கருத்து

வெறும் 15 மாதங்களில் கட்டப்பட்ட பிர்சா முண்டா ஸ்டேடியம் தான், உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம். 21,000 பார்வையாளர்கள் அமரும்வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 8 அணிகளுக்கு தனித்தனி ஓய்வறைகள் உள்ளன. இந்த ஓய்வறைகளில் சுமார் 200 வீரர்கள் தங்கமுடியும்.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியமாக பிர்சா முண்டா ஸ்டேடியத்தை கின்னஸ் அங்கீகரித்ததால், கின்னஸ் புத்தகத்தில் பிர்சா முண்டா ஸ்டேடியம் இடம்பெற்றுள்ளது. 

IND vs NZ: அவரு அணியில் தேவையே இல்ல.. அந்த பையனையாவது ஆடவைக்கலாம்..! 2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் அவரது உதவியாளர் பிர்சா முண்டா ஸ்டேடியத்தின் சாதனையை விளக்கி கூறினர். இந்த ஸ்டேடியம் சாதனையை சாத்தியமாக்கிய ஒடிசா மக்களுக்கும், அதற்காக உழைத்தவர்களுக்கும் நன்றி என்றும், மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வெறும் 15 மாதங்களில் இந்த சாதனை நடந்திருப்பது வியப்பளிப்பதாகவும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
 

click me!