#TokyoOlympics சிறப்பான ஆட்டத்தால் 100 கோடி இதயத்தை கவர்ந்த நீரஜ் சோப்ரா.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.!

By vinoth kumarFirst Published Aug 7, 2021, 7:11 PM IST
Highlights

இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு ஒட்டுமொத்த தேசமும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு ஒட்டுமொத்த தேசமும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.  இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஜெர்மனியின் ஜூலியர் வெபர், ஜோகனஸ் வெட்டர் உட்பட 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 6 வாய்ப்பு வழங்கப்பட்டன. முதல் வாய்ப்பில் 87.03 மீ., தூரம் எறிந்த நீரஜ், 2வது வாய்ப்பில் அதிகபட்சமாக 87.58 மீ., தூரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஒலிம்பிக்கில் சுதந்திர இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்து நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு ஒட்டுமொத்த தேசமும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருவதுடன், அவரது வெற்றியை நாடே கொண்டாடிவருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  நாட்டின் உண்மையான தேசிய வீரர் நீரஜ் சோப்ரா என புகழாரம் சூட்டியுள்ளார்.  நீரஜ் சோப்ரா தனது சிறப்பான ஆட்டத்தால் 100 கோடி இதயத்தை கவர்ந்துள்ளார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். 

click me!