
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக உள்ள நிலையில், இந்திய ஆணழகன் ஜெகதீஷ் லட் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.
2 முறை இந்திய ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லட், உலக சாம்பியன்ஷிப் ஆணழகன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர். நவி மும்பையில் வசித்துவந்த ஜெகதீஷ், அண்மையில் தான் குஜராத் மாநிலம் வடோதராவில் குடியேறினார். அங்கு ஜிம் வைத்திருந்தார் ஜெகதீஷ் லட்.
இந்நிலையில், 34 வயதான ஜெகதீஷ் லட்டிற்கு கொரோனா உறுதியானதையடுத்து, கடந்த 4 நாட்களாக வடோதரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா உறுதியானதால் அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றூவருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் லட் உயிரிழந்தார். கொரோனாவிற்கு இந்திய ஆணழகன் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.