
யூனியன் பிரதேசமான லடாக், மைனஸ் 30 டிகிரி உள்ள உறைபனி ஏரியில் மராத்தான் ஓட்டத்தை முதல்முறையாக வெற்றிகரமாக நடத்தி, கின்னஸ் மற்றும் உலக சாதனை படைத்துள்ளது
கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் லடாக்கில் பாங்காங் சோ ஏரி உள்ளது. உலகிலேயே மிகவும் உயரத்தில் உள்ள உறை பனி ஏரிஇதுவாகும். இந்த ஏரி பனிக்காலத்தில் மைனஸ் 30 டிகிரிக்குச் சென்று உறைந்துவிடும். இந்த ஏரி இந்தியா முதல் சீன எல்லை வரை பரந்து விரிந்து 700 சதுரகிலோமீட்டர் வரை உள்ளது.
இந்த ஏரியில்தான் 21 கி.மீ. அரை மாரத்தான் ஓட்டத்தை லடாக் நிர்வாகம் வெற்றிரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. லடாக்கின் லுக்குங் கிராமத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், மான் கிராமத்தில் முடிந்தது.
உத்தராகண்டில் துருக்கியைப் போன்ற நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு; நிலநடுக்க வல்லுநர் எச்சரிக்கை
இந்த மாரத்தான் ஓட்டத்தில் 75 பேர் பங்கேற்று, உறை ஏரியில் ஓடினர். ஆனால், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இந்த உலக கின்னஸ் சாதனை குறித்து லே மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ஸ்ரீகாந்த் பாலசாஹேப் சுசே கூறுகையில் “ லாஸ்ட் ரன் என்ற பெயரில் உறை பனி ஏரியில் 21 கி.மீ அரை மாரத்தான் ஓட்டம் நடத்தினோம். இதில் 75 பேர் பங்கேற்று ஓடினார். உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள, உறைபனி ஏரியில் மாரத்தான் ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளோம்.
இந்த மாரத்தான் ஓட்டம் காலநிலை மாற்றம் மற்றும் இமயமலைப்பகுதியை பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, லடாக் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் லடாக் மலை மேம்பாட்டுக் கவுன்சில், லே சுற்றுலாக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தின.
இந்தியா-ஆஸி.டெஸ்ட்| அகமதாபாத் போட்டியை ஆஸ்திரேலியப் பிரதமருடன் சேர்ந்து பார்க்கும் பிரதமர் மோடி
பாங்காங் உறை பனி ஏரியில் நடத்தப்பட்ட அரை மாரத்தான் ஓட்டம் தற்போது உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
விளையாட்டு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இந்த ஓட்டம் நடத்தப்பட்டது. லடாக் கிராமங்களில் குளிர்கால சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், மக்களின் வாழ்வாதார வாய்ப்புகளை உண்டாக்கும் வகையில் இதுநடத்தப்பட்டது.
இந்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டபோது, பங்கேற்பாளர்களுக்காக 5 இடங்களில் ஊட்டச்சத்து பானம், மருத்துவக் குழுக்கள், ஆக்சிஜன், மொபைல் ஆம்புலன்ஸ் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்ற மறுப்பு
இந்த ஓட்டத்தில் பங்கேற்ற 75 பேருக்கும் லே நகரில் 6 நாட்கள் பயிற்றி, பாங்காங் ஏரியில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் உடல்நிலை முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டு ஓட்டத்தில் பங்கேற்கஅனுமதிக்கப்பட்டனர்.
பனி ஏரியில் ஓடும்போது அசம்பாவிதங்களைத் தடுக்கும்வதிதத்தில் பங்கேற்பாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன்தான் ஓட்டத்தில் பங்கேற்கஅனுமதி்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இருதரப்பிலும் பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
உலகிலேயே உயரமான இடத்தில் உறைபனியில் நடத்தப்பட்ட அரை மராத்தான் போட்டி என கின்னஸில் இடம் பெற்று, சான்றிதழும் வழங்கப்பட்டது
இவ்வாறு சுசே தெரிவித்தார்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.