கோலியிடம் போட்டி நடுவர் பேசியது என்ன..? கோலியின் செயலை பெரிதுபடுத்தாதீங்க.. சப்போர்ட் செய்யும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Aug 5, 2018, 11:38 AM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு இடையே விராட் கோலியிடம் போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் பேசியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், ரூட்டை அவுட் செய்துவிட்டு, அவரது ஸ்டைலில் வழியனுப்பி வைத்த கோலியிடம் போட்டி நடுவர் பேசியதாக கூறப்படுகிறது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட்டை 80 ரன்களில் ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. 

ரூட்டை அவுட்டாக்கிய கோலி, ரூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வழியனுப்பி வைத்தார் கோலி. கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்த ரூட், பேட்டை கீழே போட்டு மகிழ்ச்சியை கொண்டாடினார். எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரூட் செய்தது போன்ற செய்கையை செய்து வழியனுப்பிவைத்தார். மேலும் ஆக்ரோஷமாக சில வார்த்தைகளையும் பேசினார். 

இதுதொடர்பாக கோலியிடம் பேசிய போட்டி நடுவர் ஜெஃப் குரோவ், கேப்டனாக பொறுப்பும் நடத்தைகளும் எப்படியிருக்க வேண்டும் எனவும் நல்ல டெஸ்ட் தொடர் தேவையற்ற சர்ச்சைகளால் திசைமாற வேண்டாம் என கோலியிடம் அறிவுறுத்தியதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த சம்பவத்தில் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்  மைக் ஆர்த்தர்டன், கவலைப்பட வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கிறது. பேட்ஸ்மென் முகத்துக்கு நேராக வந்து கோலி வசைபாடவில்லை. அவர் இயல்பாக செய்த செயல் அது. அதனால் அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என ஆர்த்தர்டன் கூறியுள்ளார். 
 

click me!