ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று நடந்த கடைசி போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் 3ஆவது இடம் பிடித்தது.
சென்னையில் நடந்து வந்த 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி இரவு 8.30 மணிக்கு மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில், மலேசியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா என்று 6 அணிகள் இடம் பெற்றன.
தொடரை கைப்பற்ற 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் – சமன் செய்யுமா இந்தியா?
இதுவரையில் நடந்த 6 சீசன்களில் முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. எப்படி என்றால், ஒரு முறை மட்டும் இரு அணிகளும் ஒன்றாக கைப்பற்றியுள்ளன. கடந்த சீசனில் தென் கொரியா அணி சாம்பியனாகியுள்ளது.
ஆக., 23 ஆம் தேதி இந்திய அணியுடன் இணையும் விராட் கோலி!
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் முதல் சீசனில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 2ஆவது இடமும், மலேசியா 3ஆவது இடமும் பிடித்தது. 2012 ஆம் ஆண்டு நடந்த சீசனில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இந்தியா 2ஆவது இடம் பிடித்தது. மலேசியா 3ஆவது இடம் பிடித்தது.
இதே போன்று, 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஜப்பான் 2ஆவது இடம் பிடிக்க, மலேசியா 3ஆவது இடம் பிடித்தது. 2016 ஆம் ஆண்டு நடந்த சீசனில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 2ஆவது இடமும், மலேசியா 3ஆவது இடமும் பிடித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாம்பியன் டிராபியை கைப்பற்றின. ஆனால், இந்த சீசனில் மலேசியா 3ஆவது இடம் பிடித்தது.
Asia Cup 2023: டெஸ்ட்டுக்கு தயாரான கேஎல் ராகுல்; ஆசிய கோப்பையில் இடம் பெறுவாரா?
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 6ஆவது சீசனில் தென் கொரியா முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. ஜப்பான் 2ஆவது இடமும், இந்தியா 3ஆவது இடமும் பிடித்தன. தற்போது முதல் முறையாக 7ஆவது சீசன் சென்னையில் நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் மலேசியா அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றி பெறும் அணியைப் பொறுத்து முதல் மற்றும் 2ஆவது இடம் தீர்மானிக்கப்படும்.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 4ஆவது முறையாக சாம்பியனாகும். இதுவே மலேசியா வென்றால் முதல் முறையாக டிராபியை கைப்பற்றும். இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய, 123 போட்டிகளில் இந்தியா 85 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 17 போட்டியில் மட்டுமே மலேசியா வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய போட்டி டிராவில் முடிந்துள்ளது.
ஆனால், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பான் 5 கோல்கள் அடிக்க, தென் கொரியா 3 கோல் மட்டுமே அடித்த நிலையில் 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தது.