தொடரை கைப்பற்ற 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் – சமன் செய்யுமா இந்தியா?

By Rsiva kumar  |  First Published Aug 12, 2023, 8:11 PM IST

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.


வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டியிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி தற்போது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது.

ஆக., 23 ஆம் தேதி இந்திய அணியுடன் இணையும் விராட் கோலி!

Tap to resize

Latest Videos

இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் மற்றும் ஓடியன் ஸ்மித் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இந்தியா வெற்றி பெற்றால் தொடர் 2-2 என்று சமன் ஆகும்.

Asia Cup 2023: டெஸ்ட்டுக்கு தயாரான கேஎல் ராகுல்; ஆசிய கோப்பையில் இடம் பெறுவாரா?

வெஸ்ட் இண்டீஸ்:

பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரொமாரியா ஷெப்பர்டு, ஓடியன் ஸ்மித், அகீல் ஹூசைன், ஓபெட் மெக்காய்.

இந்தியா:

யஷஸ்வி ஜெஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சகால், முகேஷ் குமார்.

WI vs IND: லாடர்ஹில்லில் மோசமான ரெக்கார்டு வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ்: 4ஆவது டி20 இந்தியாவிற்கு சாதகமா?

click me!