ஆக., 23 ஆம் தேதி இந்திய அணியுடன் இணையும் விராட் கோலி!

By Rsiva kumar  |  First Published Aug 12, 2023, 7:09 PM IST

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து டி20 தொடரைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இணைய இருப்பதை உறுதி செய்துள்ளார்.


வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 1-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில், 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

Asia Cup 2023: டெஸ்ட்டுக்கு தயாரான கேஎல் ராகுல்; ஆசிய கோப்பையில் இடம் பெறுவாரா?

Tap to resize

Latest Videos

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஒரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 4ஆவது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது.

WI vs IND: லாடர்ஹில்லில் மோசமான ரெக்கார்டு வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ்: 4ஆவது டி20 இந்தியாவிற்கு சாதகமா?

நாளை நடக்கும் 5ஆவது டி20 தொடருடன் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிகிறது. இதையடுத்து வரும் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இணைய உள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இத்தனை கோடியா? விளக்கம் கொடுத்த விராட் கோலி!

அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். வரும் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் 6 அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடர் நடக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த தொடர் நடத்தப்படும் நிலையில், வரும் 23 ஆம் தேதி விராட் கோலி பெங்களூரு சென்று எஞ்சிய இந்திய வீரர்கள் உடன் இணைய உள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!