உலக சாம்பியனுக்கே இந்த நிலமையா? 34 வருடத்தில் காணாத சரிவை கண்டது ஆஸ்திரேலியா...

First Published Jun 19, 2018, 12:30 PM IST
Highlights
Is this state for world champion? Australia faces slope last 34 years


ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா 34 வருடத்தில் காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. 

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

இதில் முதல் 2 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிப் பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. 

இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசை வெளியிடப்பட்டது. அதில், கடந்த 34 வருங்களில் காணாத அளவுக்கு சரிவை ஆஸ்திரேலிய அணி கண்டுள்ளது. 

நேற்று வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 6-ஆம் இடத்துக்கு சரிந்தது ஆஸ்திரேலியா. முன்னதாக, 1984-ஆம் ஆண்டு கடைசியாக 6-வது இடத்தில் ஆஸ்திரேலியா  இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலக சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி முதலிடத்தை பெற்றது. 

அதன்பின்னர் 15 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது. இதில், 13 போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடனான தொடர்களை இழந்தது பெரும் சரிவை சந்தித்தது. மேலும் சாம்பியன்ஸ் டிராஃபியிலும் முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களின் அதிருப்தியை பெற்றது.

ஐந்து முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டுள்ளது என்பது அந்த நாட்டு ரசிகர்கள்  மட்டுமின்றி மற்ற நாடுகளில் அந்த அணிக்கு உள்ள ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் பத்து இடங்களை பிடித்த அணிகளும், அவற்றின் புள்ளிகளும்... 

124 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து முதலிடம்.

122 புள்ளிகளை பெற்ற இந்தியா இரண்டாமிடம்.

113 புள்ளிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 3-ஆம் இடம்.

112 புள்ளிகளை பெற்ற நியூஸிலாந்து 4-ஆம் இடம்.    

102 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் 5-ஆம் இடம்    

102 புள்ளிகளை பெற்ற  ஆஸ்திரேலியா     6-ஆம் இடம் 

93 புள்ளிகளை பெற்ற வங்கதேசம் 7-ஆம் இடம்

77 புள்ளிகளை பெற்ற இலங்கை     8-ஆம் இடம்

69 புள்ளிகளை பெற்ற மேற்கிந்திய தீவுகள் 9-ஆம் இடம்

63 புள்ளிகளை பெற்ற ஆப்கானிஸ்தான் 10-ஆம் இடம்.

 

tags
click me!