புதிதாக 2 அணிகள் அறிமுகம்; சென்னை பிளிட்ஸில் ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர்!

By Rsiva kumarFirst Published Dec 8, 2023, 10:11 AM IST
Highlights

பிரைம் வாலிபால் லீக் தொடரின் 3ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று நடந்தது. இதில், சென்னை பிளிட்ஸ் அணியில் சமீர் ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுகப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிரைம் வாலிபால் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிரைம் வாலிபால் லீக்கின் முதல் சீசன் தொடங்கப்பட்டது. இந்த சீசனில் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணி சாம்பியனானது. 2ஆவது சீசனில் அகமதாபாத் டெபெண்டர்ஸ் அணி சாம்பியனானது. இந்த நிலையில் தான் பிரைம் வாலிபால் லீக்கின் 3ஆவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 – இந்தியா போராடி தோல்வி – ஷஃபாலி வர்மா ஆறுதல் அரைசதம்!

Latest Videos

இந்த சீசனுக்கான ஏலம் நேற்று பெங்களூருவில் உள்ள ஷெரட்டன் கிராண்டே ஹோட்டலில் நடந்தது. இதில், சர்வதேச, பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பிரிவு வீரர்கள் உள்பட 504 வீரர்கள் இடம் பெற்றனர். இந்த சீசனில் உள்ள ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். அதில், முத்துசாமி அப்பாவு, மோகன் உக்கிரபாண்டியன், அஷ்வல் ராய் உள்ளிட்ட சில வீரர்கள் ஏலத்திற்கு முன்பே தக்க வைக்கப்பட்டனர்.

Bangladesh vs New Zealand 2nd Test Day 1: வங்கதேசம் 172க்கு அவுட் – நியூசிலாந்து 55/5 ரன்கள் எடுத்து திணறல்!

இந்த சீசனில் புதிதாக வடக்கு பெல்ட் மற்றும் டெல்லி டூஃபான்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சீசனுக்கான ஏலத்தில் சென்னை பிளிட்ஸ் அணியானது யு21 வீரரான சமீரை ரூ.18 லட்சத்திற்கு ஏலத்தில் இருந்தது. இதே போன்று, கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணி அமன் குமாரை ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் ரூ.70 லட்சம் பர்ஸ் தொகையுடன் முந்தை சீசனிலிருந்து தங்களது வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அல்லது விடுவிக்க விருப்பம் இருந்தது. இந்திய வீரர்கள் 4 பிரிவிகளாக பிரிக்கப்பட்டனர். இதில், சர்வதேச வீரர்கள் நேரடியாக அணியில் சேர்க்கப்பட்டனர். பிளாட்டினம் (அடிப்படை விலை: ரூ. 8 லட்சம்), தங்கம் (அடிப்படை விலை: ரூ. 5 லட்சம்), வெள்ளி (அடிப்படை விலை: ரூ. 3 லட்சம்), வெண்கலம் (அடிப்படை விலை: ரூ. 2 லட்சம்).

டேனியல் வியாட், நாட் ஸ்கிவர் பிரண்ட் அதிரடி - இங்கிலாந்து மகளிர் அணி 197 ரன்கள் குவிப்பு!

சென்னை பிளிட்ஸ் அணியானது ஆர் பிரபாகரன் (லிபெரோ), ஹிமான்ஷூ தியாகி (அட்டாக்கர்) ஆகியோரை ரூ.3 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. மேலும், சூர்யன் நாஞ்சில் (செட்டர்) ரூ.2.6 லட்சம், ஜோயல் பெஞ்சமின் (அட்டாக்கர்) ரூ.2 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

இந்த சீசனில் புதிதாக அறிமுகமான டெல்லி டூஃபான்ஸ் அணி ரோகித் குமார் (அட்டாக்கர்) ரூ.11.25 லட்சம், அமல் கே தாமஸ் (அட்டாக்கர்) ரூ.3.4 லட்சம், ஃபயீஸ் என்கே (பிளாக் மிடில்) ரூ.3 லட்சம் மற்றும் மனோஜ் குமார் (யுனிவர்சல்) ரூ.3 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணியானது பிரின்ஸ் (மிடில் பிளாக்கர்) ரூ.14.75 லட்சம், சஹில் குமார் (யுனிவர்சல்) ரூ.10 லட்சம், அசோக் (அட்டாக்கர்) ரூ.2 லட்சம் என்று ஏலத்தில் எடுக்கப்பட்டனர். கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியானது சச்சின் கே (மிடில் பிளாக்கர்) ரூ.5 லட்சம், ஜித்தின் என் (செட்டர்) ரூ.5.9 லட்சம், லட் ஓம் வசந்த் (செட்டர்) ரூ.6.1 லட்சம், திக்விஜய் சிங் (மிடில் பிளாக்கர்) ரூ.4.75 லட்சம் மற்றும் ரதீஷ் (லிபெரோ) ரூ.2 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

Dhaka Test: பந்தை கையால் தடுத்து வித்தியாசமான முறையில் தானாகவே ஆட்டமிழந்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!

இதே போன்று கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணியில், விநாயக் (செட்டர்) ரூ. 7 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். பிரபாகரன் (அட்டாக்கர்), அர்ஜூன் நாத் எல் எஸ் (மிடில் பிளாக்கர்), அமித் சோக்கர் (அட்டாக்கர்) மற்றும் தீபக் குமார் (அட்டாக்கர்) ஆகியோர் தலா ரூ.3 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டனர். பிரஃபுல் எஸ் (மிடில் பிளாக்கர்) ரூ.9.25 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

click me!