பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெணகலப் பதக்கம் குவித்துள்ளது. இதன் மூலமாக ஒன்றுக்கு அதிகமான பதக்கங்களை குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.
கடந்த 26ஆம் தேதி பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 27ஆம் தேதி முதல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வில்வித்தை, பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளுதூக்குதல், தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், ரோவிங், ஜூடோ, ஹாக்கி, குதிரையேற்றம், படகு போட்டி, கோல்ஃப் என்று 16 விளையாட்டுகளில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
undefined
இதுவரையில் இந்தியா ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இந்தியாவிற்காக முதல் பதக்கம் வென்று கொடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்தார்.
இதே போன்று மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிந்தால் 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார். ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா 4ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இந்த நிலையில் தான் துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தகுதிச் சுற்று போட்டியில் 580 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து இறுதி போட்டியான வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் தான் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் 4ஆவது நாளான இன்று தற்போது துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடியானது கொரியா ஜோடியை எதிர்கொண்டது. இதில், கொரியா ஜோடி முதல் ஷாட்டில் 20.5 புள்ளிகள் பெறவே மனு பாக்கர் 10.2 மற்றும் சரப்ஜோத் சிங் 8.6 என்று இந்திய ஜோடி 18.8 புள்ளிகள் பெற்றது.
இதே போன்று 2ஆவது ஷாட்டில் இந்திய ஜோடி மனு பாக்கர் 10.7 மற்றும் 10.5 என்று மொத்தமாக 22.2 புள்ளிகள் பெற்றது. இதன் மூலமாக இந்த ஷாட் ஆனது 2-2 என்று டை செய்யப்பட்டது. 3ஆவது ஷாட்டில் இருவரும் தலா 10.4 புள்ளிகள் பெற்றனர். 4ஆவது ஷாட்டில் மனு பாக்கர் 10.7, சரப்ஜோத் 10.0 புள்ளிகள் பெற்றனர்.
ஐந்தாவது ஷாட் இறுதியில் இந்தியா 8-2 என்று முன்னிலை பெற்றது. 10ஆவது ஷாட்டில் பாக்கர் 10.5 மற்றும் சரப்ஜோத் 10.3 என்று புள்ளிகள் பெறவே இந்தியா 14-6 என்று முன்னிலை வகித்தது. இறுதியாக இந்தியா 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் குவித்துள்ளது. இதன் மூலமாக இந்தியா 2ஆவது வெண்கலப் பதக்கத்தை குவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்று கொத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.