Olympics 2024:இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 4: இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் வென்று கொடுப்பாரா மனு பாக்கர்?

By Rsiva kumar  |  First Published Jul 30, 2024, 11:07 AM IST

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இன்று இந்தியா 4ஆவது நாள் போட்டியில் பங்கேற்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


 

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியா 3 நாட்களில் ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். 4ஆவது நாளான இன்று இந்தியா துப்பாக்கி சுடுதல், படகோட்டுதல், ஹாக்கி, வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

Tap to resize

Latest Videos

Paris Olympics 2024, Archery: காலிறுதியில் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி அதிர்ச்சி தோல்வி!

துப்பாக்கி சுடுதல் டிராப் – ஆண்கள் தகுதி 2ஆவது நாள் – பிருத்விராஜ் தொண்டைமான், பிற்பகல் 12.30 மணி

பெண்கள் தகுதி 1ஆவது நாள் – ஷ்ரேயாஷி சிங், ராஜேஸ்வரி குமாரி

துப்பாக்கி சுடுதல் – 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் (மனு பாக்கர் – சரப்ஜோத் சிங்) – வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி

பிற்பகல் 1 மணி.

ரோவிங் – ஆண்கள் ஒற்றையர் காலிறுதி – பால்ராஜ் பன்வார்

ஹாக்கி – இந்தியா – அயர்லாந்து (ஆண்கள் பிரிவு பி), மாலை 4.45 மணி

வில்வித்தை: மகளிர் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று – அங்கிதா பகத் vs வியோலெட்டா மைஸோர் (போலந்து)

மாலை 5.14 மணி

Paris Olympics 2024: இது எனக்கான நாள் இல்லை – 4ஆவது இடம் பிடித்து வெளியேறிய அர்ஜூன் பாபுதா!

வில்வித்தை – மகளிர் தனிநபர் 1/32 எலிமினேஷன் சுற்று – பஜன் கவுர் vs சைஃபா நுராபிஃபா கமால் (இந்தோனேசியா) -மாலை 5.27 மணி

பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் – சாத்விக்சாய்ராஜ் ரெட்டி/சிராக் ஷெட்டி vs ஃபஜர் அல்ஃபியன்/முகமது ரியான் ஆர்டியான்டோ (இந்தோனேசியா) - மாலை 5.30 மணி

வில்வித்தை: மகளிர் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று – அங்கிதா பகத் (தகுதி பெற்றால்), பஜன் கவுர் (தகுதி பெற்றால்) - மாலை 5.53 மணி

பேமிண்டன்: மகளிர் இரட்டையர் (குரூப் ஸ்டேஜ்)- அஸ்வினி பொன்னப்பா/ தனிஷா க்ராஸ்டோ - செட்யானா மபாசா/ஏஞ்சலா யூ (ஆஸ்திரேலியா) - இரவு 6.20 மணி

துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் இறுதிப் போட்டி (தகுதி பெற்றிருந்தால்), பிருத்விராஜ் தொண்டைமான் டிராப்  - இரவு 7 மணி

Paris Olympics 2024: இது எனக்கான நாள் இல்லை – 4ஆவது இடம் பிடித்து வெளியேறிய அர்ஜூன் பாபுதா!

குத்துச்சண்டை: ஆண்கள் 51 கிலோ சுற்று 16 - அமித் பங்கால் vs பேட்ரிக் சின்யெம்பா (சாம்பியா) - இரவு 7.16 மணி

வில்வித்தை: ஆண்கள் தனிநபர் 1/32 எலிமினேஷன், தீரஜ் பொம்மதேவரா – ஆடம் லி (செக் குடியரசு) - இரவு 10.46 மணி

வில்வித்தை: ஆண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று (தகுதி பெற்றால்)

குத்துச்சண்டை: மகளிர் 54 கிலோ சுற்று 16, ப்ரீத்தி பவார் – யெனி மார்செலா அரியாஸ் காஸ்ட்னெடா (கொலம்பியா) - ஜூலை 31, அதிகாலை 1.20 மணி

Olympics 2024:10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோல்வி – வெண்கலப் பதக்கத்தை இழந்த அர்ஜூன் பாபுதா

click me!