பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் ஹாக்கி போட்டியில் இந்தியா காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியானது நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு காலிறுதி போட்டியில் விளையாடுகிறது. இதில், இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 52 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக கடந்த 1972 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை தோற்கடித்திருந்தது.
18 வயதான பஜன் கவுர் வில்வித்தையில் தோல்வி – காலியிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற்றம்!
undefined
அதன் பிறகு எல்லா போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவி வந்துள்ளது. இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. அதற்கு முன்னதாக 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா தங்கப் பதக்கம் கைப்பற்றினால் 44 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப் பதக்கம் வென்ற சாதனையை ஹாக்கி டீம் படைக்கும். நாளை நடைபெறும் ஹாக்கி போட்டியில் காலிறுதியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதே போன்று பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மேலும், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியானது இரவு 9 மணிக்கும், ஜெர்மனி மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியானது இரவு 11.30 மணிக்கும் தொடங்குகிறது.