
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி பதக்க பட்டியலில் 47ஆவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தோல்வி அடைந்து 4ஆவது இடம் பிடித்து பதக்கத்தை இழந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மகளிருக்கான தனிநபர் எலிமினேஷன் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பஜன் கவுர் இந்தோனேசியாவைச் சேர்ந்த தியானந்தா சொய்ருனிதாவிடம் தோல்வி அடைந்து காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளார்
இதே போன்று மற்றொரு போட்டியில் தீபிகா குமாரி ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் க்ரோப்பனை எதிர்கொண்டார். இதில் அவர் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று மாலை 4.30 மணிக்கு காலிறுதிப் போட்டி நடைபெறுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.