Paris 2024 Olympics: ஒலிம்பிக் கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகளை வழங்கிய இந்திய தூதரகம்!

Published : Aug 03, 2024, 02:47 PM IST
Paris 2024 Olympics: ஒலிம்பிக் கிராமத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகளை வழங்கிய இந்திய தூதரகம்!

சுருக்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேம்ஸ் கிராமத்தில் தங்கியுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 40 குளிர்சாதனங்களை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. துப்பாக்கி சுடுதலில் மட்டுமே இந்தியா பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. மற்ற போட்டிகளில் எல்லாம் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறி வருகிறது. கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடக்க விழா உடன் தொடங்கப்பட்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரிஸில் ஒலிம்பிக் கிராமம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாட்ரிக் பதக்கத்தை தவறவிட்ட மனு பாக்கர் - மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் 4ஆவது இடம்!

ஆனால், இது அனைத்து வீரர்களுக்கும் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சில விளையாட்டு வீரர்கள், தங்குவதற்கு ஹோட்டல்களை தேட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டு வர முடிவு செய்தனர். அமெரிக்கா போன்ற சில நாடுகள் தங்களது விளையாட்டு வீரர்களுடன் கையடக்க ஏசிகளை ஒலிம்பிக் கிராமத்திற்கு அனுப்பியுள்ளன.

Olympics 2024 India Schedule: இந்தியா விளையாடும் போட்டிகள் நாள் – 8: இந்தியா தங்கப் பதக்கம் கைப்பற்றுமா?

இந்த நிலையில் தான் தற்போது பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏசிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் வசதியாக தங்குவதற்கும், ஓய்வுந் நேரத்தை சிறப்பாக அனுபவிக்க முடியும். விளையாட்டு அமைச்சகம் SAI, IOA மற்றும் பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு போர்ட்டபிள் ஏசிகளை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஏசிகளின் அனைத்து செலவையும் விளையாட்டு அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது.

அதிரடியாக விளையாடிய அஸ்வின் – 10.5 ஓவரில் 112 ரன்கள் எடுத்து திண்டுக்கல் வெற்றி – இறுதிப் போட்டியில் டிராகன்ஸ்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி