பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 7ஆவது நாளான நேற்று இந்தியா விளையாடிய வில்வித்தை, ஷாட்புட், தடகளம் ஆகிய போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 நாட்கள் முடிவில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 47ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. 7 ஆவது நாளான நேற்று வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
undefined
இதே போன்று 5000மீ தடகளப் போட்டியில் இந்திய வீரங்கனை பருல் சவுத்ரி 15:10:68 வினாடிகளில் கடந்து 14ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். மேலும், அங்கீதா தியானி 16:19:38 வினாடிகளில் கடந்து 20ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அப்படியிருந்த நிலையில் பருல் சவுத்ரி மற்றும் தியானி இருவரும் வெளியேறியுள்ளனர். ஜூடோ போட்டியிலும் துலிகா மான் 64ஆவது சுற்று போட்டியுடன் தோல்வி அடைந்து வெளியேறினார். ஆண்களுக்கான ஷாட்புட் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தூர் 18.05 தூரம் எறிந்து 29ஆவது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் தான் 8ஆவது நாளான இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? பதக்கம் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என்று பார்க்கலாம்.
பிற்பகல் 12.30 மணி: துப்பாக்கி சுடுதல்:
மகளிருக்கான ஸ்கீட் தகுதிச் சுற்று டெ 1 – மகேஷ்வரி சவுகான் மற்றும் ரைசா தில்லான்
பிற்பகல் 12.30 மணி: துப்பாக்கி சுடுதல்
ஆண்களுக்கான ஸ்கீட் தகுதிச் சுற்று டே 2 – அனந்த் ஜீத் சிங் நருகா
பிற்பகல் 12.30 மணி: கோல்ஃப்
ஆண்களுக்கான தனிநபர் ஸ்டிரோக் பிளே சுற்று 3 – சுபாங்கர் சர்மா மற்றும் ககன்ஜீத் பில்லர்
பிற்பகல் 1 மணி: துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டி – மனு பாக்கர்
பிற்பகல் 1.52 மணி: வில்வித்தை
மகளிருக்கான தனிநபர் எலிமினேஷன் சுற்று – தீபிகா குமாரி – தியானந்தா சொய்ருனிதா
பிற்பகல் 3.50 மணி: படகுப் போட்டி
ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 5 மற்றும் 6 – விஷ்ணு சரவணன்
மாலை 4.30 மணி: வில்வித்தை
மகளிருக்கான தனிநபர் காலிறுதிப் போட்டி (தகுதி பெற்றால் மட்டும்) – தீபிகா குமாரி மற்றும் பஜன் கவுர்
மாலை 5.22 மணி: வில்வித்தை
மகளிருக்கான தனிநபர் அரையிறுதிப் போட்டி (காலிறுதியில் தகுதி பெற்றால் மட்டும்) – தீபிகா குமாரி மற்றும் பஜன் கவுர்
மாலை 5.55 மணி: படகு போட்டி
மகளிருக்கான டிங்கி ரேஸ் 4 மற்றும் 5 – நேத்ரா குமணன்
மாலை 6.03 மணி: வில்வித்தை
மகளிருக்கான தனிநபர் வெண்கலப் பதக்க போட்டி (அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தால் மட்டும்) – தீபிகா குமாரி மற்றும் பஜன் கவுர்
மாலை 6.10 மணி: வில்வித்தை
மகளிருக்கான தனிநபர் இறுதிப் போட்டி (அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும்) – தீபிகா குமாரி மற்றும் பஜன் கவுர்
இரவு 7 மணி: துப்பாக்கி சுடுதல்
ஆண்களுக்கான ஸ்கீட் இறுதிப் போட்டி – அனந்த் ஜீத் நருகா (தகுதி பெற்றால் மட்டும்)
நள்ளிரவு 12.18 மணி: துப்பாக்கி சுடுதல்
ஆண்களுக்கான 71கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டி – நிஷாந்த் தேவ் – மார்கோ வெர்டே