#TokyoOlympics மகளிர் பாக்ஸிங்: அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா தோல்வி..! வெண்கலம் வென்றார்

By karthikeyan VFirst Published Aug 4, 2021, 11:44 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பாக்ஸிங் அரையிறுதியில் துருக்கி வீராங்கனையிடம் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறினார் இந்தியாவின் லவ்லினா.
 

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பாக்ஸிங்கில் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவிற்காக விளையாடிய லவ்லினா போர்கொஹைன், முந்தைய சுற்று போட்டிகளில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடந்த அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை புசெனாஸ் சர்மெனெலியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை லவ்லினா 0-5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த லவ்லினா, வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவிற்கு இது 3வது பதக்கம். மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கமும், மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கல பதக்கமும் வென்ற நிலையில், இந்தியாவிற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் 3வது பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் லவ்லினா.
 

click me!