பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த சுனில் சேத்தரி; இந்தியா வெற்றி!

By Rsiva kumar  |  First Published Jun 21, 2023, 11:24 PM IST

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில் சேத்தரி ஹாட்ரிக் கோல் அடிக்க இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 16 நிமிடங்களுக்குள் இந்திய வீரர் சுனில் சேத்தரி 2 கோல் அடித்தார். இதன் மூலமாக இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது. இதையடுத்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் வீரர்களிடையே மோதல்: இந்திய பயிற்சியாளர் வெளியேற்றம்!

Tap to resize

Latest Videos

தொடர்ந்து 81ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் உதாண்டா சிங் கோல் அடிக்க இந்தியா 4-0 என்று கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்தப் போட்டியின் போது நடுவரது தவறான தீர்ப்பால், இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் பிஸினஸ் பார்ட்னர்!

இந்திய வீரர் ப்ரீதம் கோட்டலுக்கு நடுவர் ஃபவுல் கொடுத்து, பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பாலை த்ரோ செய்ய அழைத்ததால், இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அவரை தடுத்தார். இதன் காரணமாக பாக் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொறுப்பாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ: 117 ரன்கள் எடுத்த திருச்சி!

இதையடுத்து, நடுவர் இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை உடனடியாக வெளியேற்றினார். எனினும், பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு எச்சரிக்கை (மஞ்சள் அட்டை) மட்டுமே வழங்கப்பட்டது. எனினும், இந்தப் போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

 

Entertainment Entertainment and Entertainment 🤣🤣

Be it the Hat-trick or players fighting on the ground 🤣🤣

It's always fun to watch Ind vs Pak !!! pic.twitter.com/xYgKRMVGd0

— 𝑵𝒂𝒊𝒏𝒂 (@Lilith_blair31)

 

click me!