ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னையில் நடந்து வருகிறது. கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று 3 போட்டிகள் நடந்தது.
இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தமிழக முதல்வருடன் கெத்தா, கம்பீரமாக நடந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
முதல் போட்டியில், ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. 2ஆவது போட்டியில் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது. இறுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவருடன் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் கலந்து கொண்டார்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி உள்பட 9 போட்டியில் மாற்றம்: எந்தெந்த போட்டி? எப்போது நடக்கிறது?
இந்தப் போட்டியானது ஆரம்பம் முதலே பரபரப்பாக சென்றது. ஒவ்வொரு முறையும் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இந்தியாவிற்கு கிடைத்த 5 பெனால்ட்டி கார்னர் வாய்ப்பில் மட்டும் 3 கோல் அடிக்கப்பட்டது. முதல் 2 கோல் ஹர்மன்ப்ரீத் சிங் அடித்தார். 3ஆவது கோ ஜுக்ராஜ் சிங் அடித்தார். கடைசியாக மந்தீப் சிங் 4ஆவது கோல் அடித்தார். இதன் மூலமாக இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடித்தது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பாகிஸ்தான் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 போட்டியில் தோல்வியும், 2 போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் 5ஆவது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
வரும் 11 ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலுள்ள மலேசியாவும், 3ஆவது இடத்திலுள்ள கொரியாவும் மோதுகின்றன. 2ஆவது அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலுள்ள இந்தியாவும், 4ஆவது இடத்திலுள்ள ஜப்பான் அணியும் மோதுகின்றன. இறுதியாக 12 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
WI vs IND 3rd T20 Matchல் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!