ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடந்த கனடாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியானது 10-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆண்டுதோறும் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 13ஆவது சீசன் இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக தொடங்கியது. மலேசியாவின் தேசிய ஹாக்கி ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த ஹாக்கி தொடரானது வரும், 16ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில், 16 அணிகள் இடம் பெற்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
India vs South Africa 1st T20I: ரிங்கு சிங் வேகமாக ஓட என்ன காரணம்? உண்மையை சொன்ன சுப்மன் கில்!
இதில், ஏ பிரிவில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, சிலி, மலேசியா ஆகிய அணிகளும் பி பிரிவில் எகிப்து, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய அணிகளும், சி பிரிவில் இந்தியா, தென் கொரியா, ஸ்பெயின், கனடா ஆகிய அணிகளும், டி பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில், இந்தியா தனது முதல் போட்டியில் கொரியாவை வீழ்த்தி வெற்றியோடு இந்த தொடரை தொடங்கியது. 2ஆவது போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து நேற்று இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான அடுத்த லீக் சுற்று போட்டி நடந்தது. இதில், இந்திய வீரர்களான ஆதித்யா அர்ஜூன் லலாகே, ரோகித், அமன்தீப் லக்ரா, விஷ்ணுகாந்த், ராஜிந்தர், குஷ்வாஹா மற்றும் உத்தம் சிங் ஆகியோர் கோல் அடிக்கவே இந்தியா வெற்றி பெற்றது.
WPL 2024 Auction: ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 5 வீராங்கனைகள்!
நேற்று நடந்த 3ஆவது போட்டியில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதின. இதில், இந்திய வீரர் ஆதித்யா அர்ஜூன் லலாகே போட்டியின் 8ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். இவரைத் தொடர்ந்து ரோகித் 12ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கவே, கனடா வீரர் ஜூட் நிக்கல்சன் 21ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து அமன்தீப் லக்ரா 23ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மீண்டும் லலாகே 43ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, 51ஆவது நிமிடத்தில் லக்ரா கோல் அடித்தார்.
Legends League Cricket 2023: சுரேஷ் ரெய்னா அணியை வீழ்த்தி சாம்பியனான ஹர்பஜன் சிங் அண்ட் கோ!
போட்டியில் கடைசி 15 நிமிடம் இருந்த நிலையில், ரோகித், அமன்தீப் லக்ரா, குஷ்வாகா சௌரப் ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியாக கேப்டன் உத்தம் சின் ஒரு கோல் அடிக்க இந்தியா 10-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 12 ஆம் தேதி காலிறுதிப் போட்டி நடக்க இருக்கிறது.