
சீனாவில் தற்போது உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக பலர் தேர்வாகி பங்கு பெற்று வருகின்றனர். அவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவனும் கலந்து கொண்டுள்ளார். இன்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இளவேனில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் பங்கேற்ற முதல் ஆண்டிலேயே இளவேனில் தங்கம் வென்றிருந்தார். தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை போட்டியிலும் இளவேனில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.