லீடர்ஷிப் குவாலிட்டியை எனக்கு சொல்லிக் கொடுத்தது தல தோனி தான் !! உருகும் விராட் கோலி ..

By Selvanayagam PFirst Published Sep 26, 2018, 7:40 AM IST
Highlights

மகேந்திர சிங் தோனி என்ற ஒரே ஒரு கேப்டனிடம் இருந்து மட்டும்தான் நான் தலைமைப் பண்புகளுக்கான  அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்  என  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெருமையாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது துபாயில் நடந்து வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்துவரும் மேற்கிந்தியத்தீவுகள், ஆஸ்திரேலியத் தொடருக்கும்  கோலிக்க  ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஸ்டன்  என்ற மாத இதழுக்கு விராட் கோலி பேட்டி அளித்துள்ளார். அதில், கிரிக்கெட் விளையாடுவது என்பது என்னுடைய உணர்வில் கலந்த விஷயம். இதை வார்த்தைகளில் வர்ணிக்கவும் முடியும். அதேசமயம், கிரிக்கெட் விளையாடுவதால் ஏற்படும் மனதிருப்தியையும் விளக்கமாகக் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் டி20 போட்டிகளுக்கு ஏற்பட்டுவரும் வரவேற்பு, ரசிகர்களிடையே ஆர்வம் ஆகியவை பாரம்பரியமாக நடக்கும் 5 நாள் டெஸ்ட் போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் குறைந்து வருகிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என விராட் தெரிவித்துள்ளார்.

ஐசிசி 2019-ம் ஆண்டு அறிவித்துள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நான் ஆர்வத்துடன் வரவேற்கிறேன். இந்த போட்டித் தொடர் டெஸ்ட் போட்டிகளுக்கு மிகப்பெரிய உந்துதலைக் கொடுக்கும். ஒவ்வொரு ஆட்டமும் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும், போட்டித் தொடர் முழுவதும் ஏற்றமும், இறக்கமும் கொண்டதாக இருக்கும். டெஸ்ட் போட்டியை ஆடுவதை விரும்பும் அணிகளுக்கு இந்த தொடர் மிகுந்த உணர்ச்சிப் பெருக்காக இருக்கும் என தெரிவித்தார்.

என்னுடைய தலைமைப் பண்புக்கு முக்கியக் காரணம் தோனி மட்டுமே. தோனி என்கிற கேப்டனிடம் இருந்து மட்டுமே அனைத்துத் தலைமைப் பண்புகளையும் கற்றேன். தோனிக்கு முன்பாக யாரிடமும் இதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் இளம் வயதில் இருந்தபோது, போட்டி குறித்தும், விளையாட்டு குறித்தும் கற்றுக் கொண்டது  தோனியிடம்தான். துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதும் எனக்கு பல்வேறு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கி எனக்குப் பலவிஷயங்களை கற்றுக்கொடுத்தவர் தோனிதான் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

.

போட்டிகளின்போது  தோனிக்கு அருகே மிகநெருக்கமாக நின்று ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்ததால், அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன், எனவும்  விராட் கோலி தெரிவித்தார்.

click me!