cwg 2022: cwg medal:காமென்வெல்த் விளையாட்டு: சவுரவ் கோஷல் புதிய வரலாறு! ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார்

Published : Aug 04, 2022, 09:59 AM IST
cwg 2022: cwg medal:காமென்வெல்த் விளையாட்டு: சவுரவ் கோஷல் புதிய வரலாறு! ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார்

சுருக்கம்

பிரிட்டனில் நடந்துவரும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

பிரிட்டனில் நடந்துவரும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

காமென்வெல்த் விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய வரலாற்றை சவுரவ் கோஷல் படைத்தார். இதற்கு முன் ஸ்குவாஷ் பிரிவில் எந்த வீரரும் பதக்கம் வென்றது இல்லை.

இதெல்லாம் நல்லதுக்கு இல்லப்பா; ரொம்ப தப்பு.. கேப்டன் ரோஹித்தை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி

உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் சவுரவ் கோஷலை எதிர்த்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராப் மோதினார். இந்தப் போட்டயில் ஜேம்ஸை 11-6, 11-1, 11-4 என்ற கேம்களில் வென்று சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளின் 6வது சுற்று போட்டி முடிவுகள்..!

காமென்வெல்த் போட்டியில் சவுரவ் கோஷல் பெறும் 2-வது பதக்கம் இதுவாகும். கடந்த 2018ம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பிலகலுடன் சேர்ந்து வெள்ளி வென்றார் சவுரவ் கோஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா, ஹரிந்தர் பால் சிங் இருவரும் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 

காமன்வெல்த் பளுதூக்குதலில் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!