இதெல்லாம் நல்லதுக்கு இல்லப்பா; ரொம்ப தப்பு.. கேப்டன் ரோஹித்தை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி

By karthikeyan VFirst Published Aug 3, 2022, 9:40 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் எந்த பேட்டிங் ஆர்டரில் ஆடவிருக்கிறாரோ அதே பேட்டிங் ஆர்டரில் தான் இப்போதும் இறக்கிவிட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அணி தேர்வு மிகச்சவாலாக இருக்கும். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை எதிர்நோக்கி ரசிகர்களும் மிகுந்த எதிர்பாப்புடனும் ஆர்வத்துடனும் உள்ளனர்.

அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவரிசையில், பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி இறக்கிவிடுகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஆடாத நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். 

இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்

ஓபனிங்கில் இறங்கிய சூர்யகுமார் யாதவ், முதல் போட்டியில் 16 பந்தில் 24 ரன்களும், 2வது போட்டியில் 6 பந்தில் 11 ரன்களும் அடித்து ஏமாற்றமளித்தார். ஆனால் 3வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 44 பந்தில் 76 ரன்களை குவித்து இந்தியாவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

ஆனாலும் கூட, சூர்யகுமார் யாதவை ஓபனிங்கில் இறக்கும் முடிவை முன்னாள் ஜாம்பவான்கள் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி ஆகியோர் விமர்சித்துள்ளனர். 4ம் வரிசையில் அபாரமாக விளையாடக்கூடிய, திறமையான மிகச்சிறந்த கிரிக்கெட்டர் சூர்யகுமார் யாதவ். அவரை ஓபனிங்கில் இறக்கி சீரழித்துவிடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் எச்சரித்தார்.

இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்குவாரோ அதே பேட்டிங் ஆர்டரில் தான் அவரை இப்போதும் இறக்கவேண்டும். கேஎல் ராகுல் வந்துவிட்டால் டி20 உலக கோப்பையில் எப்படியும் அவர் தான் தொடக்க வீரராக இறங்குவார். எனவே சூர்யகுமார் மிடில் ஆர்டரில்தான் இறக்கப்படுவார். எனவே இப்போதும் அவரை அதே பேட்டிங் ஆர்டரில் இறக்குவதுதான் நல்லது என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

click me!